என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரு தரப்பினர் மோதல்"
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அய்யம்பெருமாள் என்பவரது மகன் பிரகாஷ் என்பவருடன் தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனது தம்பி (16) என்பவரை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருந்த சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கைகளால் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தண்டலை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்செல்வம், லோகேஷ், பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், சரண் உள்ளிட்ட 12 பேர் மீதும், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த மணி, பிரகாஷ், விக்னேஷ், தங்கபாலு, கண்ணன், கதிர் உள்ளிட்ட 13 பேர், ஆக மொத்தம் 25 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் 2 மைனர்கள் மற்றும் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (18), சரண் (18), தண்டலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19), விக்னேஷ் (19), தங்கபாலு (20), கண்ணன் (18), கண்ணன் (43) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தொடர்ந்து அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சித்தேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
- 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் இந்திரா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25). சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த இந்திரா, அண்ணாதுரை, செல்வி, முத்துராமன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், முத்துராமன், செல்வி, பூமாதேவி ஆகிய 4 பேர் மீதும், செல்வி கொடுத்த புகாரின் பேரில் வைத்தியநாதன், செல்வி, சதீஷ், சித்ரா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பல்லடம் போலீசார் விசாரணை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கவி சங்கர்.இவரை தெற்கு பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ், முத்துக்குட்டி, சந்தோஷ், ஆகிய மூவரும் சேர்ந்து வாட்ஸ் அப்பில் எங்களைப் பற்றி தவறாக ஏன் பேசினாய் என கூறி கவிசங்கரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் கவிசங்கர் புகார் அளித்தார் இதன் பேரில், தன்ராஜ், முத்துக்குட்டி, சந்தோஷ் ஆகிய 3பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கவி சங்கர் தன்னை தாக்கியதாக தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கவிசங்கர் மீதும், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
- அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
- திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் வழிபாடு அனைத்து சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக கொண்டு வந்த நகைகளை தூக்கி வீசியும், தீர்த்த கலசங்களை செலுத்த விடாமலும், முளைப்பாரிகளை எடுத்துச் செல்ல விடாமலும் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கச்சியம்மாபட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தாங்கள் வழிபாடு செய்வதற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
- இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
- பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
உடுமலை,
உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். கடந்த சில நாட்களாக கோவில் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் தேரோட்டம் நடைபெற இருந்தது. இதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. தகவல் கிடைத்ததும் சுண்டக்காம்பாளையம் கிராத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மோதல் போக்கு தொடர்ந்துள்ளது.இதையடுத்து போலீசார் நேற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கோவிலை பூட்டி வைத்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இன்று பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
அப்போது கலைந்துசென்ற நபர்கள், திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். போலீசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #PonnamaravathiViolence
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
ஒரு தரப்பினர் பொங்கல் வைக்க முயன்றபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கற்களை வீசி தாக்கினர். வாகனங்கள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதலைத் தொடர்ந்து தொப்பலாக்கரை கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலையடுத்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #VirudhunagarViolence
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்